• ‘சமுதாய ஒற்றுமைக்காக’ உழைத்திடுவீர்!

    'சமுதாய ஒற்றுமைக்காக' உழைத்திடுவீர்!

    கொள்கை ரீதிதியாகவும் சமூக ரீதியாகவும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பிளவுகளும் பிரச்சனைகளும் ஏராளம்! இதனைக் கண்ட, அல்குர்ஆனையும் சுன்னாவையும் முறையாகப் பின்பற்றும் அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆ கொள்கையைச் சார்ந்த மார்க்க அறிஞர்கள் சிலர்பட்ட கவலையின் வெளிப்பாடுதான் சமுதாய ஒற்றுமை! மாதஇதழ்

    மனித சமூகத்தை ஒன்றிணைக்க இஸ்லாம் ஒன்றே வழி எனும் போது முஸ்லிம் சமுதாய பிளவுகளுக்கு இஸ்லாம் ஒருபோதும் காரணமாகாது என்பதுதான் சமுதாய ஒற்றுமையின் அசைக்கமுடியாத நம்பிக்கை!

    நிச்சயமாக உங்களுடைய இந்த சமுதாயம் ஒரே சமுதாயம்தான்! நானே உங்கள் இரட்சகன்! எனவே என்னை வணங்குங்கள்! என்ற அல்குர்ஆன் (21:92) வசனம் ஏக இரட்சகனான அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்று கட்டளையிடுவதுடன், அவனை வணங்கும் முஸ்லிம் சமுதாயமும் ஏகத்துவமாய் திகழவேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.

    ஏகத்துவம் என்பது முஸ்லிம் சமுதாயத்தை கூறுபோடும் கத்தியல்ல. அந்தப் பெயர் இஸ்லாத்தின் உட்பிரிவினர் எவரின் தனிப்பட்ட சொத்துமல்ல. முஸ்லிம் சமுதாயத்தின் மற்றொரு பெயர்தான் ஏகத்துவ சமுதாயம்!

    முஸ்லிம் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள பிளவுகளுக்கு அதில் புரையோடிக்கிடக்கும் அனாச்சாரங்களும் கொள்கைக் குழப்பங்களும் பெரிதும் காரணமாய் அமைந்துள்ளதை மறுக்கமுடியாது. ஆனால் அதை சீராக்கவும் செப்பனிடவும் இஸ்லாம் வழிகாட்டியுள்ளதா? இல்லையா? என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டிய அம்சமாகும்.

    தனி மனிதரான உங்களை எண்ணிப் பாருங்கள்! உங்களுடைய சிந்தனையாலும் செயல்பாட்டாலும் அனைத்துச் சுழ்நிலைகளிலும் அல்லாஹ் விரும்பியபடி, மார்க்க நெறியில் நடக்கின்றீர்களா?

    தவறு செய்யும்போது உங்கள் மீது நீங்கள் எடுத்துக் கொண்ட ஒழுங்கு நடவடிக்கைகள் என்னென்ன? தவறுக்கு ஒத்துழைத்ததைக் தண்டித்து, உங்களை நீங்களே குருடாகவும், செவிடாகவும், முடமாகவும் ஆக்கிக்கொண்டீர்களா? கட்டுப்படாத உள்ளத்தையும் உயிரையும் மாய்த்துக் கொண்டீர்களா? இவ்வாறு செய்ய மார்க்கம்தான் அனுமதிக்கிறா? இல்லை என்பதுதான் உங்கள் பதில் என்றால், நீங்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்தபோது என்னதான் செய்தீர்கள்!?

    உங்களைத் திருத்தும் போராட்டம் உங்கள் மரணம் வரை தொடர்கிறது! முஸ்லிம் சமுதாயத்தை திருத்தும் போராட்டம் நமது மரணம் வரை ஏன் தொடரக் கூடாது?

    அவர்களுக்கு அல்லாஹ்வின் தண்டனையை எச்சரிப்பது போன்று, அவர்களையும் அல்லாஹ் மன்னிக்கலாம் என்று ஏன் எண்ணக் கூடாது?

    முரண்பாடுகளைக் கண்டவுடன் பிரிவுதான் தீர்வு என்றிருந்தால் உலகில் ஒரே ஒரு குடும்பத்தைக் கூட காணமுடியாது. மனித சமூகத்தின் கட்டமைப்பு இவ்வாறிருக்க, அந்தப் பண்பாடு முஸ்லிம் சமுதாய விஷயத்தில் ஏன் நிலைநாட்டப்படக் கூடாது? என்பதைத்தான் சமுதாய ஒற்றுமை தனது சவாலாக்கிக் கொண்டது! தம்மால் முடிந்த பணிகளை முன்னெடுத்துப் புறப்பட்ட குறுகிய காலத்தில் -அல்லாஹ்வின் உதவியால்- பல வரலாற்றுப் பதிவுகளையும் முக்கிய ஆவணங்களையும் தமிழுலகிற்குத் தந்துள்ளது.

    சமுதாய ஒற்றுமை துவங்கிய இரண்டாவது மாதத்திலேயே 'பிறை ஒரு பிரச்சனையா?' என்ற தலைப்பில் பலதரப்பட்ட அறிஞர்களிடம் பேட்டி கண்டு, ஒற்றுமைக்கான முன்மாதிரியை மேற்கொண்டு முக்கிய வரலாற்றுப் பதிவை ஏற்படுத்தியது. பெருநாள் மகிழ்ச்சிக்கான பாலமாகவும் அது அமைந்தது.

    பொதுநிதியகம் ‘பைத்துல் மால்’ தொடர்பாக ஒரு வரலாற்று ஆவணத்தை சமர்ப்பித்தது. அந்தக் கட்டுரை பிற இதழ்களிலும் பிரசுரிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு அமைப்புகளின் கீழ் இயங்கிவரும் ‘பைத்துல்மால்' சேவைகளை காய்தல் உவத்தல் இன்றி ‘வட்டி ஒழிப்பில் பைத்துல்மாலின் பங்கு’ என்ற தலைப்பில் மக்கள் மன்றத்தில் சமர்ப்பித்தது. அது பல பைத்துல்மால்கள் உருவாக காரணமானது.

    காஷ்மீர்: கண்ணீர் தேசம் என்ற தலைப்பில் வெளியான இதழ் கண்ணீரை வற்ற வைத்தது. இந்திய இராணுவம் இந்தியர்களை காப்பதற்காகவா? முஸ்லிம்களை அழிப்பதற்காகவா? என்ற வினாவை எழுப்பியது.

    திருவிடைச்சேரி பள்ளிவாசலில் டி.என்.டி.ஜே தொடர்புடையவர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு கொலை தொடர்பாக சமுதாய ஒற்றுமை நடத்திய நேரடி களஆய்வு தமிழகத்தில் வளர்ந்து வரும் ‘கவாரஜி என்ற பிரிவினைக்காரர்களை’ மக்களுக்கு மிகத் தெளிவாக அடையாளம் காட்டியது.

    ‘அலக்’ ஓர் அற்புதம் எனும் தலைப்பில் வெளியான இதழ் தமிழகத்தில் அல்குர்ஆனுடன் விளையாடிக் கொண்டிருக்கும் ஒருவரின் அறிவின்மையை ஆதாரங்களுடன் அற்புதமாக நிரூபித்தது.

    வரலாற்றுப் பின்னணியில் ஹிஜ்ரா காலண்டர் என்ற கட்டுரை ஆங்கில காலண்டரின் அலட்சியப் போக்கையும் ஆதாரங்களுடன் அலசியது.

    போர்களப் புயல் திப்பு சுல்தானில் துவங்கி, மருதநாயகம், ஹைதர் என்ற வரலாற்றுப் பயணத் தொடர்கள் முஸ்லிம் மன்னர்களை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்த்தது. வரலாற்று விழிப்புணர்வைம் ஏற்படுத்தியது.

    'பாபர் மஸ்ஜித் உதிர்ந்த நம்பிக்கை' எனும் இதழ் நீதி மன்ற வரலாற்றில் கருப்புக் கொடியேற்றியது. அயோத்தித் தீர்ப்பு இரண்டாவது கரசேவை? என்ற கவிதை நெல்லையில் பேனராகவும், நம் நிலை நன்றாயில்லை, காரணம் - நாம் ஒன்றாயில்லை என்று துவங்கும் ‘கண்ணாடிக் கயிறு’ என்ற கவிதை, மதுரை காஜியார் தோப்பு, இளைஞர் நற்பணி மன்றத்தினரால் அச்சிடப்பட்டு வினியோகிக்கப்பட்டதும், இலங்கை, ‘உண்மை உதயம்’ இதழில் பிரசுரிக்கப்பட்டதும் சமுதாய ஒற்றுமைக்காக மேலும் உழைக்கத் தூண்டியது.

    பல இஸ்லாமிய இணைய தளங்களுக்கு மத்தியில் நமது இதழ் சார்பாக நடத்தப்படும் www.samuthayaotrumai.com என்ற இணையதளம் மிகக் குறுகிய காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    இஸ்லாம் மட்டுமே உலகிற்கான அழகிய வழிகாட்டி என்பதை கொள்கையாகக் கொண்ட நமது இதழ், மார்க்க தகவல்களை ஒரு பகுதியாகவும் உலக நடப்புகளையும் அதற்கான இஸ்லாமியத் தீர்வுகளை மறு பகுதியாகவும் அமைத்துக் கொண்டது. அதற்காக கடும் சிரமங்களுக்கு மத்தியில் பல பெருமதிப்புள்ள ஆக்கங்களை தந்து, இப்பயணத்தில் தோள் கொடுக்கும் நல்லுள்ளங்களுக்கு அல்லாஹ் ஈருலகிலும் நற்கூலி வழங்குவானாக!

    எந்த இயக்கத்தையும் சாராமல், தனித்தன்மையுடன் செயலாற்ற புறப்பட்டபோது, பல சிரமங்களை எதிர் கொள்ளவேண்டியிருக்கிறது. ஓரிரு சகோதரர்களின் பொருளாதாரத்துடன் துவங்கப்பட்ட இலட்சியப் பயணம் கடும் சிரமங்களுக்கு மத்தியில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

    சமுதாய ஒற்றுமை இதழுக்கு நீங்கள் சந்தாதாரர் ஆவதுடன், மாதாந்திரம் குறைந்தது ஒருவரையாவது சந்தாதாராக ஆக்கி உதவிடுங்கள்! நிதி நிலையை கருத்தில் கொண்டு பத்திரிக்கையின் விலையிலும் சிறு மாற்றங்கள் வரலாம். விளம்பரங்கள் மட்டுமே பொருளாதாரச் சிரமத்தைக் குறைக்கும் வழியாக இருப்பதால் அதிகமாக விளம்பரம் தந்து இப்பணி சிறக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    'சமுதாய ஒற்றுமைக்காக' உழைத்திடுவீர்!

Posts in the இந்திய செய்திகள் Category at Samuthaya Otrumai சமுதாய ஒற்றுமை

முஸ்லிம்களும் இந்தியாவும் (தொடர் – 1)

March 31, 2011

முஸ்லிம்களும் இந்தியாவும் எனும் இத்தொடரில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களால் இந்திய நாடு, அதன் வாழ்க்கைமுறை, பண்பாடு, கலாச்சாரம், மதம் மற்றும் கலை இலக்கியங்களில் ஏற்பட்ட தாக்கம், மாற்றம் மற்றும் இந்தியாவிற்கு முஸ்லிம்கள் ஆற்றிய தொண்டு ஆகியவற்றை காண்போம். இதை கூற வேண்டிய அவசியம், இந்திய நாட்டை உருவாக்கி, அதற்கு ஒரு உயரிய கலாச்சாரத்தை, நாகரீகத்தை, நிர்வாகத்தை, வரலாற்றை, அதன் மக்களுக்கு இந்தியன் என்ற உணர்வை வழங்கியதில் முஸ்லிம்களுக்கு பெரும் பங்கு உண்டு. இதனை உயரிய வரலாற்று மேதைகள் அறிவர். பாமரர்களும் இதனை அறிய வேண்டும் என்பதே, இத்தொடரின் நோக்கம்…. இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே! முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு இந்தியா என்று ஒரு நாடு இருக்கவில்லை. அது (இந்தியப் பகுதி) கூர்ஜர – பிரதிஹரர்கள் நாடு, கன்னோசி நாடு, பாலர்கள் நாடு, கலிங்க நாடு, ராஷ்டிர கூடர்கள் நாடு, பாண்டிய நாடு, சேர நாடு, சோழ நாடு என பல மேலும் படிக்க

இந்த கொலைக்கு காரணம்

March 10, 2011

தில்லியில், நொய்டா பகுதியில், 2008ம் ஆண்டு, மே மாதம் 16ம் நாள் அரூசி தல்வார் என்ற 15 வயது சிறுமியும் அவளது வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ்-ம் அரூசியின் வீட்டில் கொல்லப்பட்டுக் கிடந்தனர். இந்த வழக்கில் தில்லி காவல்துறை முதல்கட்ட விசாரணை நடத்தியது. அரூசியின் அப்பா ராஜேஷ் தல்வார் தான் கொலையாளி என்றும், கொல்லப்படும் முன்பு அரூசி கற்பழிக்கப்பட்டுள்ளார் என்றும் காவல்துறை சொன்னது. காவல்துறையின் இந்த அறிக்கை தில்லியில் பெரும் பரபரப்பை மேலும் படிக்க

அசிமானந்தா கழட்டிவிடப்பட்ட ஏஜென்ட்

February 27, 2011

சாலை ஓரத்தில், பேருந்தில், ரயில் பயணத்தில், கடை வீதியில் எங்காவது, தொப்பியும் தாடியும் வைத்துள்ள ஒரு முஸ்லிம் கையில் ஒரு மஞ்சள் பையுடன் காணப்பட்டால், “பையில் என்ன பாய் வெடிகுண்டா” என்று நக்கலடித்து கேட்பது ஒரு வழக்கமாக மாறிவிட்டிருந்தது. பத்திரிகையாளர் முதல் பொதுமக்கள் வரை முஸ்லிம் என்றால் தீவிரவாதி என்று சொல்லத் தொடங்கினர். பிச்சை எடுக்கும் முஸ்லிம் கூட இந்த அவசொல்லுக்கு ஆளாக நேர்ந்தது. தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் மேலும் படிக்க

அசிமானந்தா: மனம் உருகினார் மாமா

February 18, 2011

அஜ்மீர்தர்கா, மக்கா மஸ்ஜித் (ஹைதராபாத்) உள்ளிட்டு நடந்த சில குண்டு வெடிப்புகளுக்கு தான் பொறுப்பேற்பதாக அவ்வழக்குகள் சம்பந்தமாக கைது செய்யப்பட்டிருக்கும் அசிமானந்தா எனும் சாமியார் ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த ஒப்புதல் வாக்கு மூலத்திற்கு பின்னணியாக மனம் உருகும் உண்மை சம்பவம் இருந்திருக்கிறது. 80 வருட இந்திய சினிமா வரலாற்றில் கூட இதுபோன்றதொரு கதை புனையப்பட்டதில்லை எனலாம். தரமானதொரு கலைப்படம் பண்ணத்தக்க விதமாக அச்சம்பவம் நடந்திருக்கிறது. ஆனால் இது “கதையல்ல நிஜம்”. மேலும் படிக்க

மருந்து விலை கொள்(ளையும்)கையும், மக்கள் விரோத அரசும்

January 23, 2011

இன்றைய சூழலில் உலகை சுருக்கமாக, எளிதாக எப்படி புரிந்து கொள்ளலாம்? வணிக நலனா? மக்கள் நலனா? என வரும்போது எந்தத் துறையை எடுத்தாலும் அது மக்கள் நலனை புறந்தள்ளி வணிக நலனை காக்கும் கொள்கைகளையே ஆளும் கட்சியானாலும் சரி, எதிர்கட்சியானாலும் சரி, கடைப்பிடிப்பதே நடைமுறை உண்மை! மருத்துவத் துறையில் எப்படி வணிக நலன் காக்கப்படுகிறது, மக்கள் நலன் புறக்கணிக்கப்படுகிறதுஎனப் பார்ப்போம். மக்கள் பொதுவாக அதிகம் பாதிப்புள்ளாகும் நோய்களுக்கான மருந்தின் மொத்த மேலும் படிக்க

இந்தியாவை ஆட்டிப்படைத்த ஊழல்கள்

January 12, 2011

இரண்டாம் ஐக்கிய முற்போக்கு அரசின் கற்பை மூன்று ஊழல்கள் பலாத்காரம் செய்திருக்கின்றன. காமன்வெல்த் போட்டிகள், ஸ்பெக்டரம் எனும் அலைகற்றை விற்பனை, மும்பை ஆதர்ஷ் குடியிருப்பு ஆகிய மூன்று ஊழல்கள் கடந்த மாதம் சுனாமி வேகத்தில் சுழன்றடித்தன. ஊழல் குற்றச்சாட்டுகளை சுமக்காத கட்சிகளோ, ஆட்சிகளோ இந்தியாவில் இல்லை எனலாம். மக்களும் ஊழலை பொருட்படுத்தி ஒரு அரசை தேர்ந்தெடுப்பதாக இல்லை. சந்தர்ப்பவாதம், சமூகவியல் சூழல், சாதிய வாக்கு வங்கி, சிறுபான்மை பாதுகாப்பு, தேர்தலிலும் மேலும் படிக்க

பாபர் மஸ்ஜித் விவகாரம்: போராட்டங்கள் வலிமைப்படுத்தப்பட வேண்டும்

December 12, 2010

இந்திய ஒருமைப்பாட்டின் அடையாள சின்னங்களில் ஒன்றான பாபர் மஸ்ஜித். காவி பயங்கரவாதிகளால் இடித்து நொறுக்கப்பட்டு 18 ஆண்டுகள் கடந்து விட்டது. 1992 டிசம்பர் 6 ஆம் நாள், அந்த கறுப்பு ஞாயிற்றுக்கிழமையில் நடந்து முடிந்த அந்த பயங்கரவாதம், இந்தியாவின் ஒற்றுமைக்கும், அமைதிக்கும் பேராபத்தை ஏற்படுத்தி விட்டது. இந்தியாவின் அரசியல் கண்ணியத்தையும், இந்தியர்களின் சகிப்புத்தன்மையையும் சர்வதேச அளவில் நிலைகுலைய வைத்த அந்நிகழ்வு, இன்று வரை அழியாத வரலாற்று கரையாக நிலைத்து விட்டது. மேலும் படிக்க

மன்மோகன்சிங் அரசின் ஏமாற்று வித்தை – ஆசிரியர் பக்கம்

November 13, 2010

வட்டியில்லாமல் இயங்கும் இஸ்லாமிய வங்கிகள் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் செய்தியாளர் கூட்டத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில் இந்தியாவில் இஸ்லாமிய வங்கிகள் இயங்குவது தொடர்பாக மத்திய ரிசர்வ் வங்கியிடம் கருத்து கேட்கப்போவதாக பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டள்ளார். இதனை தொடர்ந்து மீண்டும் இஸ்லாமிய வங்கிகள் குறித்து இந்திய ஊடகங்களில் பரபரப்பாக செய்திகளும் வாசகர் கருத்து கணிப்புகளும் நடத்தப்பட்டுள்ளன. திரு. மன்மோகன் சிங் நமது நாட்டின் மேலும் படிக்க

வரலாற்றை கொன்றது புராணம்

October 6, 2010

செப். 30 அன்று மாலை 3.30 மணிக்கு 60 ஆண்டுகாலமாய் எதிர்பார்த்த தீர்ப்பு வரவிருக்கிறது என்ற பரபரப்பு நாட்டையே கட்டிப் போட்டது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மட்டுமல்ல… அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்களும் உலக நாடுகளின் அரசுகளும் எதிர்பார்த்திருந்தார்கள். இந்திய சாலைகள் அலஹாபாத்தை நோக்கி இருந்தது என்றால் அது மிகையில்லை…காரணம், உலகிலேயே ஜனநாயகத்திலும், சிறுபான்மை உரிமைகளை மதிப்பதிலும் அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளை விட இந்தியா சிறந்தது என்ற நம்பிக்கைதான். ஆனால், அது மேலும் படிக்க

தீர்ப்புகள் திருத்தப்படட்டும்

October 6, 2010

தீர்ப்புகள் திருத்தப்படட்டும் :- செப்டம்பர் 30: இந்திய நீதிமன்ற வரலாற்றின் கருப்பு தினம் பாபரி மஸ்ஜித் வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு வழங்கியுள்ள தீர்ப்பு இந்திய நீதிமன்ற வரலாற்றின் ஒரு கரும் புள்ளியாக அமைந்துள்ளது. ஒரு சொத்து யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் ஆவணங்கள், வருவாய் பதிவேடுகள் மற்றும் சட்டப்பூர்வமான ஆதாரங்களுக்கு பதிலாக வெறுமனே ஹிந்துக்களின்; ஒரு பிரிவினரின் நம்பிக்கையின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அலஹாபாத் மேலும் படிக்க

பாபரி பள்ளிவாசல் தீர்ப்பு வரலாற்றை சிதைத்துள்ளது

September 6, 2010

பாபரி மஸ்ஜித் வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு வழங்கியுள்ள தீர்ப்பை ஒரு அரசியல் தீர்ப்பு என்றே கருதவேண்டும். இத்தகைய தீர்ப்பை வழங்குவதற்கு நீதிமன்றம் தேவையில்லை. அரசே இப்படிப்பட்ட ஒரு முடிவை நீண்ட நாட்களுக்கு முன்பே எடுத்திருக்க இயலும். இடிக்கப்பட்ட பள்ளிவாசல் இருந்த இடத்தை கையகப்படுத்தி அங்கு ஒரு புதிய கோயிலை கட்டுவது தான் இந்த தீர்ப்பின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது. பாபரி மஸ்ஜித் பிரச்சனையில் அரசி யல் மட்டுமின்றி மேலும் படிக்க