• ‘சமுதாய ஒற்றுமைக்காக’ உழைத்திடுவீர்!

    'சமுதாய ஒற்றுமைக்காக' உழைத்திடுவீர்!

    கொள்கை ரீதிதியாகவும் சமூக ரீதியாகவும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பிளவுகளும் பிரச்சனைகளும் ஏராளம்! இதனைக் கண்ட, அல்குர்ஆனையும் சுன்னாவையும் முறையாகப் பின்பற்றும் அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆ கொள்கையைச் சார்ந்த மார்க்க அறிஞர்கள் சிலர்பட்ட கவலையின் வெளிப்பாடுதான் சமுதாய ஒற்றுமை! மாதஇதழ்

    மனித சமூகத்தை ஒன்றிணைக்க இஸ்லாம் ஒன்றே வழி எனும் போது முஸ்லிம் சமுதாய பிளவுகளுக்கு இஸ்லாம் ஒருபோதும் காரணமாகாது என்பதுதான் சமுதாய ஒற்றுமையின் அசைக்கமுடியாத நம்பிக்கை!

    நிச்சயமாக உங்களுடைய இந்த சமுதாயம் ஒரே சமுதாயம்தான்! நானே உங்கள் இரட்சகன்! எனவே என்னை வணங்குங்கள்! என்ற அல்குர்ஆன் (21:92) வசனம் ஏக இரட்சகனான அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்று கட்டளையிடுவதுடன், அவனை வணங்கும் முஸ்லிம் சமுதாயமும் ஏகத்துவமாய் திகழவேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.

    ஏகத்துவம் என்பது முஸ்லிம் சமுதாயத்தை கூறுபோடும் கத்தியல்ல. அந்தப் பெயர் இஸ்லாத்தின் உட்பிரிவினர் எவரின் தனிப்பட்ட சொத்துமல்ல. முஸ்லிம் சமுதாயத்தின் மற்றொரு பெயர்தான் ஏகத்துவ சமுதாயம்!

    முஸ்லிம் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள பிளவுகளுக்கு அதில் புரையோடிக்கிடக்கும் அனாச்சாரங்களும் கொள்கைக் குழப்பங்களும் பெரிதும் காரணமாய் அமைந்துள்ளதை மறுக்கமுடியாது. ஆனால் அதை சீராக்கவும் செப்பனிடவும் இஸ்லாம் வழிகாட்டியுள்ளதா? இல்லையா? என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டிய அம்சமாகும்.

    தனி மனிதரான உங்களை எண்ணிப் பாருங்கள்! உங்களுடைய சிந்தனையாலும் செயல்பாட்டாலும் அனைத்துச் சுழ்நிலைகளிலும் அல்லாஹ் விரும்பியபடி, மார்க்க நெறியில் நடக்கின்றீர்களா?

    தவறு செய்யும்போது உங்கள் மீது நீங்கள் எடுத்துக் கொண்ட ஒழுங்கு நடவடிக்கைகள் என்னென்ன? தவறுக்கு ஒத்துழைத்ததைக் தண்டித்து, உங்களை நீங்களே குருடாகவும், செவிடாகவும், முடமாகவும் ஆக்கிக்கொண்டீர்களா? கட்டுப்படாத உள்ளத்தையும் உயிரையும் மாய்த்துக் கொண்டீர்களா? இவ்வாறு செய்ய மார்க்கம்தான் அனுமதிக்கிறா? இல்லை என்பதுதான் உங்கள் பதில் என்றால், நீங்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்தபோது என்னதான் செய்தீர்கள்!?

    உங்களைத் திருத்தும் போராட்டம் உங்கள் மரணம் வரை தொடர்கிறது! முஸ்லிம் சமுதாயத்தை திருத்தும் போராட்டம் நமது மரணம் வரை ஏன் தொடரக் கூடாது?

    அவர்களுக்கு அல்லாஹ்வின் தண்டனையை எச்சரிப்பது போன்று, அவர்களையும் அல்லாஹ் மன்னிக்கலாம் என்று ஏன் எண்ணக் கூடாது?

    முரண்பாடுகளைக் கண்டவுடன் பிரிவுதான் தீர்வு என்றிருந்தால் உலகில் ஒரே ஒரு குடும்பத்தைக் கூட காணமுடியாது. மனித சமூகத்தின் கட்டமைப்பு இவ்வாறிருக்க, அந்தப் பண்பாடு முஸ்லிம் சமுதாய விஷயத்தில் ஏன் நிலைநாட்டப்படக் கூடாது? என்பதைத்தான் சமுதாய ஒற்றுமை தனது சவாலாக்கிக் கொண்டது! தம்மால் முடிந்த பணிகளை முன்னெடுத்துப் புறப்பட்ட குறுகிய காலத்தில் -அல்லாஹ்வின் உதவியால்- பல வரலாற்றுப் பதிவுகளையும் முக்கிய ஆவணங்களையும் தமிழுலகிற்குத் தந்துள்ளது.

    சமுதாய ஒற்றுமை துவங்கிய இரண்டாவது மாதத்திலேயே 'பிறை ஒரு பிரச்சனையா?' என்ற தலைப்பில் பலதரப்பட்ட அறிஞர்களிடம் பேட்டி கண்டு, ஒற்றுமைக்கான முன்மாதிரியை மேற்கொண்டு முக்கிய வரலாற்றுப் பதிவை ஏற்படுத்தியது. பெருநாள் மகிழ்ச்சிக்கான பாலமாகவும் அது அமைந்தது.

    பொதுநிதியகம் ‘பைத்துல் மால்’ தொடர்பாக ஒரு வரலாற்று ஆவணத்தை சமர்ப்பித்தது. அந்தக் கட்டுரை பிற இதழ்களிலும் பிரசுரிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு அமைப்புகளின் கீழ் இயங்கிவரும் ‘பைத்துல்மால்' சேவைகளை காய்தல் உவத்தல் இன்றி ‘வட்டி ஒழிப்பில் பைத்துல்மாலின் பங்கு’ என்ற தலைப்பில் மக்கள் மன்றத்தில் சமர்ப்பித்தது. அது பல பைத்துல்மால்கள் உருவாக காரணமானது.

    காஷ்மீர்: கண்ணீர் தேசம் என்ற தலைப்பில் வெளியான இதழ் கண்ணீரை வற்ற வைத்தது. இந்திய இராணுவம் இந்தியர்களை காப்பதற்காகவா? முஸ்லிம்களை அழிப்பதற்காகவா? என்ற வினாவை எழுப்பியது.

    திருவிடைச்சேரி பள்ளிவாசலில் டி.என்.டி.ஜே தொடர்புடையவர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு கொலை தொடர்பாக சமுதாய ஒற்றுமை நடத்திய நேரடி களஆய்வு தமிழகத்தில் வளர்ந்து வரும் ‘கவாரஜி என்ற பிரிவினைக்காரர்களை’ மக்களுக்கு மிகத் தெளிவாக அடையாளம் காட்டியது.

    ‘அலக்’ ஓர் அற்புதம் எனும் தலைப்பில் வெளியான இதழ் தமிழகத்தில் அல்குர்ஆனுடன் விளையாடிக் கொண்டிருக்கும் ஒருவரின் அறிவின்மையை ஆதாரங்களுடன் அற்புதமாக நிரூபித்தது.

    வரலாற்றுப் பின்னணியில் ஹிஜ்ரா காலண்டர் என்ற கட்டுரை ஆங்கில காலண்டரின் அலட்சியப் போக்கையும் ஆதாரங்களுடன் அலசியது.

    போர்களப் புயல் திப்பு சுல்தானில் துவங்கி, மருதநாயகம், ஹைதர் என்ற வரலாற்றுப் பயணத் தொடர்கள் முஸ்லிம் மன்னர்களை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்த்தது. வரலாற்று விழிப்புணர்வைம் ஏற்படுத்தியது.

    'பாபர் மஸ்ஜித் உதிர்ந்த நம்பிக்கை' எனும் இதழ் நீதி மன்ற வரலாற்றில் கருப்புக் கொடியேற்றியது. அயோத்தித் தீர்ப்பு இரண்டாவது கரசேவை? என்ற கவிதை நெல்லையில் பேனராகவும், நம் நிலை நன்றாயில்லை, காரணம் - நாம் ஒன்றாயில்லை என்று துவங்கும் ‘கண்ணாடிக் கயிறு’ என்ற கவிதை, மதுரை காஜியார் தோப்பு, இளைஞர் நற்பணி மன்றத்தினரால் அச்சிடப்பட்டு வினியோகிக்கப்பட்டதும், இலங்கை, ‘உண்மை உதயம்’ இதழில் பிரசுரிக்கப்பட்டதும் சமுதாய ஒற்றுமைக்காக மேலும் உழைக்கத் தூண்டியது.

    பல இஸ்லாமிய இணைய தளங்களுக்கு மத்தியில் நமது இதழ் சார்பாக நடத்தப்படும் www.samuthayaotrumai.com என்ற இணையதளம் மிகக் குறுகிய காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    இஸ்லாம் மட்டுமே உலகிற்கான அழகிய வழிகாட்டி என்பதை கொள்கையாகக் கொண்ட நமது இதழ், மார்க்க தகவல்களை ஒரு பகுதியாகவும் உலக நடப்புகளையும் அதற்கான இஸ்லாமியத் தீர்வுகளை மறு பகுதியாகவும் அமைத்துக் கொண்டது. அதற்காக கடும் சிரமங்களுக்கு மத்தியில் பல பெருமதிப்புள்ள ஆக்கங்களை தந்து, இப்பயணத்தில் தோள் கொடுக்கும் நல்லுள்ளங்களுக்கு அல்லாஹ் ஈருலகிலும் நற்கூலி வழங்குவானாக!

    எந்த இயக்கத்தையும் சாராமல், தனித்தன்மையுடன் செயலாற்ற புறப்பட்டபோது, பல சிரமங்களை எதிர் கொள்ளவேண்டியிருக்கிறது. ஓரிரு சகோதரர்களின் பொருளாதாரத்துடன் துவங்கப்பட்ட இலட்சியப் பயணம் கடும் சிரமங்களுக்கு மத்தியில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

    சமுதாய ஒற்றுமை இதழுக்கு நீங்கள் சந்தாதாரர் ஆவதுடன், மாதாந்திரம் குறைந்தது ஒருவரையாவது சந்தாதாராக ஆக்கி உதவிடுங்கள்! நிதி நிலையை கருத்தில் கொண்டு பத்திரிக்கையின் விலையிலும் சிறு மாற்றங்கள் வரலாம். விளம்பரங்கள் மட்டுமே பொருளாதாரச் சிரமத்தைக் குறைக்கும் வழியாக இருப்பதால் அதிகமாக விளம்பரம் தந்து இப்பணி சிறக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    'சமுதாய ஒற்றுமைக்காக' உழைத்திடுவீர்!

Posts in the ரமலான் – நோன்பு Category at Samuthaya Otrumai சமுதாய ஒற்றுமை

வரலாற்று பின்னணியில் ஹிஜ்ரா காலண்டர்

December 20, 2010

ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அடையாளமாக நாட்காட்டிகள் உள்ளன. அச்சமுதாயங்கள் பெருமைப் படக்கூடிய பல அர்த்தங்கள் அந்த நாட்காட்டிகளில் அடங்கியுள்ளன. மூஸா (அலை) அவர்களின் காலத்தை மதித்து அவர்களின் நபித்துவக் காலத்தில் இருந்து தமது நிகழ்வுகளுக்கு தேதியிட யூதர்கள் ஆரம்பித்ததும், ஈஸா (அலை) அவர்களின் பிறப்பைக் கண்ணியப்படுத்தி அதிலிருந்து தேதியிட கிருத்தவர்கள் ஆரம்பித்ததும் இதனால்தான். இவ்வாறு ஒவ்வொரு சமூகமும் தனது கொள்கை கோட்பாடுகளுடனும் நாகரீகத்துடனும் தொடர்புபடக் கூடிய அம்சங்களை கொண்டு, தமது நாட்காட்டிகளை நிர்ணயித்தனர். ஒரு சமூகம் பிற சமூகத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டு அதன் தாக்கத்தில் உள்ளாகும் போது ஆக்கிரமித்த சமூகங்களின் நாட்காட்டிகளை பின்பற்றியது வரலாறு கூறும் உண்மை. நாட்காட்டிகளின் இவ்வாறான முக்கியத்துவத்தை உணர்ந்து முஸ்லிம்கள் ஹிஜ்ரீ காலண்டரைப் பின்பற்றுவது அவசியமாகின்றது. ஹிஜ்ரி நாட்காட்டியை பின்பற்றுவது இஸ்லாமிய ஆளுமையின் சிறப்பு அடையாளமாகும். இந்த விஷயத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்ட இஸ்லாத்தின் எதிரிகள் ஹிஜ்ரா நாட்காட்டியை விட்டும் முஸ்லிம்களை திசை திருப்பி கிருத்துவ நாட்காட்டியைப் திணிப்பதற்கு முயற்சி மேலும் படிக்க

ஹிஜ்ரி ஆண்டின் துவக்கம்: முஹர்ரம்

December 16, 2010

இப்பூமியில் வாழக்கூடிய மக்கள் காலத்தை கணக்கிடுவதற்கு பல்வேறு மாதங்களையும் நாட்களையும் உண்டாக்கி வைத்துள்ளனர். ஜனவரியை துவக்கமாக கொண்ட ஆங்கில வருடபிறப்பு, சித்திரையை துவக்கமாக கொண்ட தமிழ்வருட பிறப்பு போன்று பலவருடபிறப்புகள் நடைமுறையில் உள்ளன. நபி(ஸல்) அவர்களது ஹிஜ்ரத்தை அடிப்படையாக கொண்டு இஸ்லாமிய ஆண்டுகள் கணக்கிடப்படுகின்றன. அனைவரிடத்திலும் ஓராண்டுக்கு 12 மாதங்கள் என்ற அளவிலேயே கணக்கிடப்படுகின்றன. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவு) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு மேலும் படிக்க

சுன்னாவின் ஒளியில் பெருநாள்

September 30, 2010

அரபு மொழியில் பெருநாள் என்பதற்கு ‘ஈத்’ என்று சொல்லப்படும். உண்மையில் ஈத் என்றால் திரும்பத் திரும்ப வருதல் என்பது பொருளாகும். பெருநாள் ஒவ்வொரு ஆண்டும் திரும்பத் திரும்ப வருவதால் இப்பெயரைக் கொண்டு அழைக்கப்படுகின்றது. நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது, மதீனாவாசிகள் ஜாஹிலிய்யாக் கால இரு பெருநாட்களைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது அதற்குப்பதிலாக அவற்றை விடச்சிறந்த இரண்டு பெருநாட்களை அல்லாஹ் உங்க ளுக்குத் தந்துள்ளான். அவை & ஒன்று அறுத்துப் மேலும் படிக்க

கர்ப்பிணிகள் நோன்பு வைக்கலாமா-?

August 18, 2010

ரமளான் மாதங்களில் பொதுவாக பெண்களுக்கு என்ன சந்தேகம் ஏற்படுகிறதென்றால், கர்ப்பிணிப் பெண்கள் நோன்பு நோற்கலாமா?- நோன்பு வைக்கும் பொழுது எந்த விதமான பாதுகாப்புகளை செய்து கொள்ள வேண்டும்? என்று நிறைய பேர் கேட்கிறார்கள். பொதுவாக பெண்களின் கர்ப்ப காலங்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம்-. முதல் மூன்று மாதங்கள், நடு மூன்று மாதங்கள், கடைசி மூன்று மாதங்கள். இதில் முதல் மூன்று மாதங்கள் கஷ்டமான நாட்களாகும். வாந்தி, மயக்கம், குமட்டல் போன்றவை மேலும் படிக்க

வேர்கள் காய்ந்தாலும் இலைகள் உதிர வேண்டாம்

August 18, 2010

பிறை முடிவு ஆட்சியாளரைச் சார்ந்தது நோன்பு மற்றும் பெருநாட்கள் ஒட்டுமொத்த முஸ்லிம்கள் தொடர்புடைய காரியமாக இருப்பதினால் அவைகளை தீர்மானிப்பது இஸ்லாமிய ஆட்சியாளரின் பொறுப்பாகும். இதனை தனிமனிதர்கள் தங்கள் கைகளில் எடுப்பது கூடாது. அவ்வாறு எடுத்தால் அது சமூகப் பிளவிற்கும் பிரச்சனைக்கும் காரணமாகிவிடும். தமிழக முஸ்லிம் இது விஷயத்தில் முஸ்லிம் சமுதாய ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு தலைமை காஜியை சார்ந்திருக்க வேண்டும். பிறையை தீர்மானிப்பதில் அவர் தவறிழைத்தால் அதற்கான தண்டனையை அவர் மேலும் படிக்க

பிறை ஒரு பிரச்சனையா?

August 14, 2010

பிறை ஒரு பிரச்சனையா? – பல அறிஞர்களின் கருத்துக்கள் பிறையை பார்த்தே முடிவெடுக்க வேண்டும் ஏ.இ. அப்துர்ரஹ்மான் ஹஜ்ரத் (தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபைத் தலைவர்) ‘‘பிறை பார்த்த தகவல் எங்கிருந்து வந்தாலும் ஏற்க வேண்டும்’’ எஸ். கமாலுத்தீன் மதனீ (மாநிலத் தலைவர், ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ்) ‘‘சமூக ஒற்றுமை நிலைநாட்டப்பட வேண்டும்’’ டாக்டர். ஆர்.கே நூர் மதனீ (இயக்குனர், இப்னுல் கைய்யூம் இஸ்லாமிய ஆய்வுக் கூடம், சென்னை) மேலும் படிக்க

பெருநாள் மகிழ்ச்சியைத் தேடி…

August 14, 2010

மார்க்க விஷயத்தில் கருத்து வேறுபாடான சட்டங்களை அணுகும் முறை தவறி, ஒரு வகையினர் மற்ற வகையினரை விமர்சிக்கும் போக்கு சமூகத்தில் ஆரோக்கியமில்லா சூழலுக்கு வழிவகுக்கிறது. நாட்களையும், மாதங்களையும் தீர்மானிப்பதற்கு சூரியக் கணக்கு-சந்திரக் கணக்கு என்ற இரு முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. நேரத்தை சூரியனை அடிப்படையாக வைத்துத் தீர்மானித்தாலும் நாளையும், மாதத்தையும் சந்திரனை அடிப்படையாக வைத்துத் தீர்மானிப்பதுதான் பொறுத்தமானதாகும். நோன்பு, ஹஜ், இத்தா போன்ற இஸ்லாமிய இபாதத்கள் சந்திர மாதக் கணக்கின் மேலும் படிக்க

வழிகாட்டும் வான்மறை வந்திறங்கிய மாதம்

August 12, 2010

‘‘ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டி யாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிறித்தறிவிப்பது மான அல்குர்ஆன் அருளப்பட்டது. எனவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகின்றாரோ அவர் அம் மாதம் நோன்பு நோற்க வேண்டும்” (அல்குர்ஆன் 2:185) ரமளான் மாதத்தில் சுவன வாயில்கள் திறக்கப் பட்டு, நரக வாயில்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத் தான்களுக்கு விலங்கிடப்படுகின்றன. வணக்கங் களுக்கு ஏனைய காலத்தில் வழங்கப்படும் நன்மை களை விட மேலும் படிக்க