• ‘சமுதாய ஒற்றுமைக்காக’ உழைத்திடுவீர்!

    'சமுதாய ஒற்றுமைக்காக' உழைத்திடுவீர்!

    கொள்கை ரீதிதியாகவும் சமூக ரீதியாகவும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பிளவுகளும் பிரச்சனைகளும் ஏராளம்! இதனைக் கண்ட, அல்குர்ஆனையும் சுன்னாவையும் முறையாகப் பின்பற்றும் அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆ கொள்கையைச் சார்ந்த மார்க்க அறிஞர்கள் சிலர்பட்ட கவலையின் வெளிப்பாடுதான் சமுதாய ஒற்றுமை! மாதஇதழ்

    மனித சமூகத்தை ஒன்றிணைக்க இஸ்லாம் ஒன்றே வழி எனும் போது முஸ்லிம் சமுதாய பிளவுகளுக்கு இஸ்லாம் ஒருபோதும் காரணமாகாது என்பதுதான் சமுதாய ஒற்றுமையின் அசைக்கமுடியாத நம்பிக்கை!

    நிச்சயமாக உங்களுடைய இந்த சமுதாயம் ஒரே சமுதாயம்தான்! நானே உங்கள் இரட்சகன்! எனவே என்னை வணங்குங்கள்! என்ற அல்குர்ஆன் (21:92) வசனம் ஏக இரட்சகனான அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்று கட்டளையிடுவதுடன், அவனை வணங்கும் முஸ்லிம் சமுதாயமும் ஏகத்துவமாய் திகழவேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.

    ஏகத்துவம் என்பது முஸ்லிம் சமுதாயத்தை கூறுபோடும் கத்தியல்ல. அந்தப் பெயர் இஸ்லாத்தின் உட்பிரிவினர் எவரின் தனிப்பட்ட சொத்துமல்ல. முஸ்லிம் சமுதாயத்தின் மற்றொரு பெயர்தான் ஏகத்துவ சமுதாயம்!

    முஸ்லிம் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள பிளவுகளுக்கு அதில் புரையோடிக்கிடக்கும் அனாச்சாரங்களும் கொள்கைக் குழப்பங்களும் பெரிதும் காரணமாய் அமைந்துள்ளதை மறுக்கமுடியாது. ஆனால் அதை சீராக்கவும் செப்பனிடவும் இஸ்லாம் வழிகாட்டியுள்ளதா? இல்லையா? என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டிய அம்சமாகும்.

    தனி மனிதரான உங்களை எண்ணிப் பாருங்கள்! உங்களுடைய சிந்தனையாலும் செயல்பாட்டாலும் அனைத்துச் சுழ்நிலைகளிலும் அல்லாஹ் விரும்பியபடி, மார்க்க நெறியில் நடக்கின்றீர்களா?

    தவறு செய்யும்போது உங்கள் மீது நீங்கள் எடுத்துக் கொண்ட ஒழுங்கு நடவடிக்கைகள் என்னென்ன? தவறுக்கு ஒத்துழைத்ததைக் தண்டித்து, உங்களை நீங்களே குருடாகவும், செவிடாகவும், முடமாகவும் ஆக்கிக்கொண்டீர்களா? கட்டுப்படாத உள்ளத்தையும் உயிரையும் மாய்த்துக் கொண்டீர்களா? இவ்வாறு செய்ய மார்க்கம்தான் அனுமதிக்கிறா? இல்லை என்பதுதான் உங்கள் பதில் என்றால், நீங்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்தபோது என்னதான் செய்தீர்கள்!?

    உங்களைத் திருத்தும் போராட்டம் உங்கள் மரணம் வரை தொடர்கிறது! முஸ்லிம் சமுதாயத்தை திருத்தும் போராட்டம் நமது மரணம் வரை ஏன் தொடரக் கூடாது?

    அவர்களுக்கு அல்லாஹ்வின் தண்டனையை எச்சரிப்பது போன்று, அவர்களையும் அல்லாஹ் மன்னிக்கலாம் என்று ஏன் எண்ணக் கூடாது?

    முரண்பாடுகளைக் கண்டவுடன் பிரிவுதான் தீர்வு என்றிருந்தால் உலகில் ஒரே ஒரு குடும்பத்தைக் கூட காணமுடியாது. மனித சமூகத்தின் கட்டமைப்பு இவ்வாறிருக்க, அந்தப் பண்பாடு முஸ்லிம் சமுதாய விஷயத்தில் ஏன் நிலைநாட்டப்படக் கூடாது? என்பதைத்தான் சமுதாய ஒற்றுமை தனது சவாலாக்கிக் கொண்டது! தம்மால் முடிந்த பணிகளை முன்னெடுத்துப் புறப்பட்ட குறுகிய காலத்தில் -அல்லாஹ்வின் உதவியால்- பல வரலாற்றுப் பதிவுகளையும் முக்கிய ஆவணங்களையும் தமிழுலகிற்குத் தந்துள்ளது.

    சமுதாய ஒற்றுமை துவங்கிய இரண்டாவது மாதத்திலேயே 'பிறை ஒரு பிரச்சனையா?' என்ற தலைப்பில் பலதரப்பட்ட அறிஞர்களிடம் பேட்டி கண்டு, ஒற்றுமைக்கான முன்மாதிரியை மேற்கொண்டு முக்கிய வரலாற்றுப் பதிவை ஏற்படுத்தியது. பெருநாள் மகிழ்ச்சிக்கான பாலமாகவும் அது அமைந்தது.

    பொதுநிதியகம் ‘பைத்துல் மால்’ தொடர்பாக ஒரு வரலாற்று ஆவணத்தை சமர்ப்பித்தது. அந்தக் கட்டுரை பிற இதழ்களிலும் பிரசுரிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு அமைப்புகளின் கீழ் இயங்கிவரும் ‘பைத்துல்மால்' சேவைகளை காய்தல் உவத்தல் இன்றி ‘வட்டி ஒழிப்பில் பைத்துல்மாலின் பங்கு’ என்ற தலைப்பில் மக்கள் மன்றத்தில் சமர்ப்பித்தது. அது பல பைத்துல்மால்கள் உருவாக காரணமானது.

    காஷ்மீர்: கண்ணீர் தேசம் என்ற தலைப்பில் வெளியான இதழ் கண்ணீரை வற்ற வைத்தது. இந்திய இராணுவம் இந்தியர்களை காப்பதற்காகவா? முஸ்லிம்களை அழிப்பதற்காகவா? என்ற வினாவை எழுப்பியது.

    திருவிடைச்சேரி பள்ளிவாசலில் டி.என்.டி.ஜே தொடர்புடையவர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு கொலை தொடர்பாக சமுதாய ஒற்றுமை நடத்திய நேரடி களஆய்வு தமிழகத்தில் வளர்ந்து வரும் ‘கவாரஜி என்ற பிரிவினைக்காரர்களை’ மக்களுக்கு மிகத் தெளிவாக அடையாளம் காட்டியது.

    ‘அலக்’ ஓர் அற்புதம் எனும் தலைப்பில் வெளியான இதழ் தமிழகத்தில் அல்குர்ஆனுடன் விளையாடிக் கொண்டிருக்கும் ஒருவரின் அறிவின்மையை ஆதாரங்களுடன் அற்புதமாக நிரூபித்தது.

    வரலாற்றுப் பின்னணியில் ஹிஜ்ரா காலண்டர் என்ற கட்டுரை ஆங்கில காலண்டரின் அலட்சியப் போக்கையும் ஆதாரங்களுடன் அலசியது.

    போர்களப் புயல் திப்பு சுல்தானில் துவங்கி, மருதநாயகம், ஹைதர் என்ற வரலாற்றுப் பயணத் தொடர்கள் முஸ்லிம் மன்னர்களை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்த்தது. வரலாற்று விழிப்புணர்வைம் ஏற்படுத்தியது.

    'பாபர் மஸ்ஜித் உதிர்ந்த நம்பிக்கை' எனும் இதழ் நீதி மன்ற வரலாற்றில் கருப்புக் கொடியேற்றியது. அயோத்தித் தீர்ப்பு இரண்டாவது கரசேவை? என்ற கவிதை நெல்லையில் பேனராகவும், நம் நிலை நன்றாயில்லை, காரணம் - நாம் ஒன்றாயில்லை என்று துவங்கும் ‘கண்ணாடிக் கயிறு’ என்ற கவிதை, மதுரை காஜியார் தோப்பு, இளைஞர் நற்பணி மன்றத்தினரால் அச்சிடப்பட்டு வினியோகிக்கப்பட்டதும், இலங்கை, ‘உண்மை உதயம்’ இதழில் பிரசுரிக்கப்பட்டதும் சமுதாய ஒற்றுமைக்காக மேலும் உழைக்கத் தூண்டியது.

    பல இஸ்லாமிய இணைய தளங்களுக்கு மத்தியில் நமது இதழ் சார்பாக நடத்தப்படும் www.samuthayaotrumai.com என்ற இணையதளம் மிகக் குறுகிய காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    இஸ்லாம் மட்டுமே உலகிற்கான அழகிய வழிகாட்டி என்பதை கொள்கையாகக் கொண்ட நமது இதழ், மார்க்க தகவல்களை ஒரு பகுதியாகவும் உலக நடப்புகளையும் அதற்கான இஸ்லாமியத் தீர்வுகளை மறு பகுதியாகவும் அமைத்துக் கொண்டது. அதற்காக கடும் சிரமங்களுக்கு மத்தியில் பல பெருமதிப்புள்ள ஆக்கங்களை தந்து, இப்பயணத்தில் தோள் கொடுக்கும் நல்லுள்ளங்களுக்கு அல்லாஹ் ஈருலகிலும் நற்கூலி வழங்குவானாக!

    எந்த இயக்கத்தையும் சாராமல், தனித்தன்மையுடன் செயலாற்ற புறப்பட்டபோது, பல சிரமங்களை எதிர் கொள்ளவேண்டியிருக்கிறது. ஓரிரு சகோதரர்களின் பொருளாதாரத்துடன் துவங்கப்பட்ட இலட்சியப் பயணம் கடும் சிரமங்களுக்கு மத்தியில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

    சமுதாய ஒற்றுமை இதழுக்கு நீங்கள் சந்தாதாரர் ஆவதுடன், மாதாந்திரம் குறைந்தது ஒருவரையாவது சந்தாதாராக ஆக்கி உதவிடுங்கள்! நிதி நிலையை கருத்தில் கொண்டு பத்திரிக்கையின் விலையிலும் சிறு மாற்றங்கள் வரலாம். விளம்பரங்கள் மட்டுமே பொருளாதாரச் சிரமத்தைக் குறைக்கும் வழியாக இருப்பதால் அதிகமாக விளம்பரம் தந்து இப்பணி சிறக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    'சமுதாய ஒற்றுமைக்காக' உழைத்திடுவீர்!

Posts in the கவிதைகள் Category at Samuthaya Otrumai சமுதாய ஒற்றுமை

பன்முக நாயகர் நபிகள் நாயகம்

April 9, 2011

மீளாது, இருளில் மிடிமையில், இவ்வுலகம் தாளாத கொடுமையில் தடுமாறி நிற்கையில் முழுமதியாய் வந்தார் முகமது நபிநாதர் சீரற்ற உலகை அவர் சீர்திருத்தம் செய்ததனால் சீறத்துந் நபி – நமது சிந்தையிலே இனிக்கிறது… எழுத, படிக்க அறியாத ஏந்தல் நபியை உலகம் எழுதியும், படித்தும் ஏற்றம் பெறுகிறது… அவர் தோன்றையிலே புகழோடு தோன்றினார் உள்ளங்களில் சான்றாண்மையை ஊன்றினார். தூய வழியில் மக்களைத் தூண்டினார். ஏகனை மட்டுமே வணங்குங்கள் என்பதையே வேண்டினார். அன்று அறங்களைத் துறந்திருந்தது அரபகம் மண்டும் மடமைகளுக்கு அதுவே மரபகம் கோத்திரமும் மடமை சாத்திரமும் – கொண்ட ஆத்திரமும் – காட்டும் போர்த்திறமும் நிரம்பியிருந்த மக்களை நபிகள் மாற்றினார். காட்டரபிகள் எனப்பட்டோரை உலகுக்கே – எடுத்துக் காட்டரபிகள் என்றாக்கிக் காட்டினார். உலக மனிதர்களே.. ஒன்று படுங்கள் என்றார் தோழமைத் தோன்றல் அந்த அழைப்பும்.. அயரா உழைப்பும்… கறுப்பின அடிமையாயிருந்த கண்மணியாய் பிலாலை உயர்குலத்தில் பிறந்த உமர் தலைவரே என அழைக்கும் தன்மையைத் மேலும் படிக்க

பந்தங்களை அணைப்பீர்

January 29, 2011

அலைகள் என்ன பேசக்கூடும்… கடல் கடந்த கணவனின் கவலை ஓரலை… துணை பிரிந்த மனைவியின் துயரம் ஒரு பேரலை… பலரின் வாழ்வுக் கடலில் இந்த அலைகள் ஓய்வதே இல்லை… இளமைக் கற்பூரம்… அதில் எரிவதோ வறுமை நெருப்பு… முன்னதாய் முடிந்த சகோதரிகளின் திருமணம்…… பின்னர் நடந்த சடங்குச் சுரண்டல்கள்… இளமையின் விளிம்பில் இவனது திருமணம் எல்லாம் கடனைக் கடலாக்க… கடல் தாண்ட வேண்டிய நிர்ப்பந்தம்… பாலைநிலத் தீக்கொடுமை அங்கே தன் மேலும் படிக்க

தன்மானப் போரில் சுதந்திரம் மலரும்!

December 23, 2010

ஆப்கானியர்கள் பிறவி போராளிகள்! அவர்கள் நெருப்பையும் எரிக்கும் நெருப்புகள். எதிரிகளோடு போராடுவதே அவர்களது வாழ்க்கை! அது, அடக்குமுறைக்கு பணியாத சுதந்திர வேட்கை! எதிரிகளால் வெடிகுண்டுகளை வீச முடியும். இவர்களால் வெடி மருந்துகளாகவே மாற முடியும். பதுங்கு குழிகள்தான் அவர்களுக்கு இல்லங்கள்! பீரங்கிகள்தான் கட்டில்கள்! துப்பாக்கிகள் தான் ஊன்று கோல்கள்! அவர்களுக்கு பிடித்த எழுத்து ஆயுத எழுத்து! அமெரிக்கர்களே…! பன்னாட்டு கூலிப்படைகளே…! தோல்விகளை மறைக்க தேடுதல் வேட்டை நடத்துபவர்களே…! ஆப்கானின் நெடிய மேலும் படிக்க

அயோத்தியத் தீர்ப்பு இரண்டாவது கரசேவை?

October 9, 2010

அறுபதாண்டு கடந்து அறிவிக்கப்பட்டது ‘அயோத்தியத் தீர்ப்பு’ (சில எழுத்துக்களை மாற்றிப் படித்தாலும் தவறில்லை) நீதிமன்றத்தை அவமதிப்பது பெருங்குற்றம் நீதிமன்றம் நீதியை அவமதிப்பது…? சட்டம் ஆக்கப்பட்டது சடம் பிரிக்கப்பட்டது இடம் இனி சட்டம் எங்கே இருக்கும் ஆட்சியகத்திலா? அருங் காட்சியகத்திலா? இந்த கட்டப் பஞ்சாயத்தின் சட்டப் பஞ்சாயத்துகள் சதிராட்டம் பார்த்து கட்டப் பஞ்சாயத்துகள் கவுரவம் பெற்றன நல்லோர்களின் நம்பிக்கைகள் கருகக் கருக… இடித்துத் தள்ளப்பட்டன 6.12.1992 அன்று ஒரு மசூதி 30.09.2010 மேலும் படிக்க

கண்ணாடிக் கயிறு

September 5, 2010

நம் நிலை நன்றாயில்லை காரணம் – நாம் ஒன்றாயில்லை… பிறை மதி காண்பதிலும் குறைமதி நமக்கு.. பிரிவதும், சரிவதும் தொடர்கதை எமக்கு.. ஒரே இறை… எத்தனைக் கூட்டங்கள்… ஒரே மறை… எத்தனைக் குழப்பங்கள்… ஒரே பிறை எத்தனைப் பெருநாட்கள்… மார்க்கம் வலியுறுத்தும் பிரியம் தெரியவில்லை நமக்கு மார்க்கத்தை வைத்தே பிரியத் தெரிகிறது… நாம் செண்டுகளைப் பரிமாறும் பெருநாட்களில் ஏகாதிபத்தியம் குண்டுகளை வீசுகிறது… பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தானம் எரியும் ஈராக் கருகும் காஷ்மீர் மேலும் படிக்க

அந்த ஒரு நாளுக்காக…

August 3, 2010

உரிமை கேட்போரின் உயிர்களுக்கு விடுதலை கொடுத்து அதிகாரத் துப்பாக்கிகளால் கொண்டாடுகின்றன ஆனந்த சுதந்திரத்தை…! முரடர்களிடமிருந்து ஒரு நள்ளிரவில் மீட்டோம் சுதந்திரப் பொக்கிஷத்தை, அப்போது விழிப்போடிருந்த திருடர்களைப் பற்றித் தெரியாமல்… தேசிய கொடி ஏறியது ஓங்கிய கம்பத்தில்… ஏறினர் அதிகார குடும்பத்தில்… அடிமை இந்தியாவில் தியாகங்களன் வென்றன சுதந்திர இந்தியாவில் துரோகங்கள் வென்றன… வீரியமாய் வளர்ந்துள்ளது விடுதலை இந்தியா… அன்று ஒரே ஒரு ஜாலியன் வாலாபாக் இன்று நாடெங்கும்… நாடெங்கும்… அடிமை மேலும் படிக்க

எல்லைக் கோடுகள் மாறும் பாலஸ்தீனம் மலரும்

July 9, 2010

பாலஸ்தீனம்: இது யூதர்களுக்கு புதைகுழி முஸ்லிம்களுக்கு முகவரி. பைத்துல் முகத்தஸ் அது எங்கள் மூன்றாம் புனிதஸ்தலம், எதிர்கால பாலஸ்தீன நகரம் ஒரு நாள் எல்லைக் கோடுகள் மாற்றியமைக்கப்படும். அகதிகளாய் தேசத்தை தாண்டிய நதிகளாய் வாழும் பாலஸ்தீனர்களின் கொடிகள் அங்கே பறக்கும். பெட்ரோல் சுகத்திலும் டீசல் பெருமையிலும் வாழ்நாளை கழிக்கும் அரண்மனை கோழைகளுக்கு மத்தியில்… ஆயுதங்களோடு திரியும் மானமிகு போராளிகளாய் வாழ்கிறார்கள் பாலஸ்தீனர்கள்! தாயின் கருவறை வெப்பத்திலேயே இவர்கள் வீரம் பெறுகிறார்கள். மேலும் படிக்க