தலைப்பு: பிறப்பு முதல் இறப்பு வரை – பாகம் – 1 உரை: ஷேஹ். முபாரக் மஸ்வூத் மதனி நாள்: 02-02-2013 – சனிக்கிழமை இடம்: அல்ஹஸனாத் மஸ்ஜித் மற்றும் மதரஸா, கள்ளக்குறிச்சி
'சமுதாய ஒற்றுமைக்காக' உழைத்திடுவீர்!
கொள்கை ரீதிதியாகவும் சமூக ரீதியாகவும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பிளவுகளும் பிரச்சனைகளும் ஏராளம்! இதனைக் கண்ட, அல்குர்ஆனையும் சுன்னாவையும் முறையாகப் பின்பற்றும் அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆ கொள்கையைச் சார்ந்த மார்க்க அறிஞர்கள் சிலர்பட்ட கவலையின் வெளிப்பாடுதான் சமுதாய ஒற்றுமை! மாதஇதழ்
மனித சமூகத்தை ஒன்றிணைக்க இஸ்லாம் ஒன்றே வழி எனும் போது முஸ்லிம் சமுதாய பிளவுகளுக்கு இஸ்லாம் ஒருபோதும் காரணமாகாது என்பதுதான் சமுதாய ஒற்றுமையின் அசைக்கமுடியாத நம்பிக்கை!
நிச்சயமாக உங்களுடைய இந்த சமுதாயம் ஒரே சமுதாயம்தான்! நானே உங்கள் இரட்சகன்! எனவே என்னை வணங்குங்கள்! என்ற அல்குர்ஆன் (21:92) வசனம் ஏக இரட்சகனான அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்று கட்டளையிடுவதுடன், அவனை வணங்கும் முஸ்லிம் சமுதாயமும் ஏகத்துவமாய் திகழவேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.
ஏகத்துவம் என்பது முஸ்லிம் சமுதாயத்தை கூறுபோடும் கத்தியல்ல. அந்தப் பெயர் இஸ்லாத்தின் உட்பிரிவினர் எவரின் தனிப்பட்ட சொத்துமல்ல. முஸ்லிம் சமுதாயத்தின் மற்றொரு பெயர்தான் ஏகத்துவ சமுதாயம்!
முஸ்லிம் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள பிளவுகளுக்கு அதில் புரையோடிக்கிடக்கும் அனாச்சாரங்களும் கொள்கைக் குழப்பங்களும் பெரிதும் காரணமாய் அமைந்துள்ளதை மறுக்கமுடியாது. ஆனால் அதை சீராக்கவும் செப்பனிடவும் இஸ்லாம் வழிகாட்டியுள்ளதா? இல்லையா? என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டிய அம்சமாகும்.
தனி மனிதரான உங்களை எண்ணிப் பாருங்கள்! உங்களுடைய சிந்தனையாலும் செயல்பாட்டாலும் அனைத்துச் சுழ்நிலைகளிலும் அல்லாஹ் விரும்பியபடி, மார்க்க நெறியில் நடக்கின்றீர்களா?
தவறு செய்யும்போது உங்கள் மீது நீங்கள் எடுத்துக் கொண்ட ஒழுங்கு நடவடிக்கைகள் என்னென்ன? தவறுக்கு ஒத்துழைத்ததைக் தண்டித்து, உங்களை நீங்களே குருடாகவும், செவிடாகவும், முடமாகவும் ஆக்கிக்கொண்டீர்களா? கட்டுப்படாத உள்ளத்தையும் உயிரையும் மாய்த்துக் கொண்டீர்களா? இவ்வாறு செய்ய மார்க்கம்தான் அனுமதிக்கிறா? இல்லை என்பதுதான் உங்கள் பதில் என்றால், நீங்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்தபோது என்னதான் செய்தீர்கள்!?
உங்களைத் திருத்தும் போராட்டம் உங்கள் மரணம் வரை தொடர்கிறது! முஸ்லிம் சமுதாயத்தை திருத்தும் போராட்டம் நமது மரணம் வரை ஏன் தொடரக் கூடாது?
அவர்களுக்கு அல்லாஹ்வின் தண்டனையை எச்சரிப்பது போன்று, அவர்களையும் அல்லாஹ் மன்னிக்கலாம் என்று ஏன் எண்ணக் கூடாது?
முரண்பாடுகளைக் கண்டவுடன் பிரிவுதான் தீர்வு என்றிருந்தால் உலகில் ஒரே ஒரு குடும்பத்தைக் கூட காணமுடியாது. மனித சமூகத்தின் கட்டமைப்பு இவ்வாறிருக்க, அந்தப் பண்பாடு முஸ்லிம் சமுதாய விஷயத்தில் ஏன் நிலைநாட்டப்படக் கூடாது? என்பதைத்தான் சமுதாய ஒற்றுமை தனது சவாலாக்கிக் கொண்டது! தம்மால் முடிந்த பணிகளை முன்னெடுத்துப் புறப்பட்ட குறுகிய காலத்தில் -அல்லாஹ்வின் உதவியால்- பல வரலாற்றுப் பதிவுகளையும் முக்கிய ஆவணங்களையும் தமிழுலகிற்குத் தந்துள்ளது.
சமுதாய ஒற்றுமை துவங்கிய இரண்டாவது மாதத்திலேயே 'பிறை ஒரு பிரச்சனையா?' என்ற தலைப்பில் பலதரப்பட்ட அறிஞர்களிடம் பேட்டி கண்டு, ஒற்றுமைக்கான முன்மாதிரியை மேற்கொண்டு முக்கிய வரலாற்றுப் பதிவை ஏற்படுத்தியது. பெருநாள் மகிழ்ச்சிக்கான பாலமாகவும் அது அமைந்தது.
பொதுநிதியகம் ‘பைத்துல் மால்’ தொடர்பாக ஒரு வரலாற்று ஆவணத்தை சமர்ப்பித்தது. அந்தக் கட்டுரை பிற இதழ்களிலும் பிரசுரிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு அமைப்புகளின் கீழ் இயங்கிவரும் ‘பைத்துல்மால்' சேவைகளை காய்தல் உவத்தல் இன்றி ‘வட்டி ஒழிப்பில் பைத்துல்மாலின் பங்கு’ என்ற தலைப்பில் மக்கள் மன்றத்தில் சமர்ப்பித்தது. அது பல பைத்துல்மால்கள் உருவாக காரணமானது.
காஷ்மீர்: கண்ணீர் தேசம் என்ற தலைப்பில் வெளியான இதழ் கண்ணீரை வற்ற வைத்தது. இந்திய இராணுவம் இந்தியர்களை காப்பதற்காகவா? முஸ்லிம்களை அழிப்பதற்காகவா? என்ற வினாவை எழுப்பியது.
திருவிடைச்சேரி பள்ளிவாசலில் டி.என்.டி.ஜே தொடர்புடையவர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு கொலை தொடர்பாக சமுதாய ஒற்றுமை நடத்திய நேரடி களஆய்வு தமிழகத்தில் வளர்ந்து வரும் ‘கவாரஜி என்ற பிரிவினைக்காரர்களை’ மக்களுக்கு மிகத் தெளிவாக அடையாளம் காட்டியது.
‘அலக்’ ஓர் அற்புதம் எனும் தலைப்பில் வெளியான இதழ் தமிழகத்தில் அல்குர்ஆனுடன் விளையாடிக் கொண்டிருக்கும் ஒருவரின் அறிவின்மையை ஆதாரங்களுடன் அற்புதமாக நிரூபித்தது.
வரலாற்றுப் பின்னணியில் ஹிஜ்ரா காலண்டர் என்ற கட்டுரை ஆங்கில காலண்டரின் அலட்சியப் போக்கையும் ஆதாரங்களுடன் அலசியது.
போர்களப் புயல் திப்பு சுல்தானில் துவங்கி, மருதநாயகம், ஹைதர் என்ற வரலாற்றுப் பயணத் தொடர்கள் முஸ்லிம் மன்னர்களை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்த்தது. வரலாற்று விழிப்புணர்வைம் ஏற்படுத்தியது.
'பாபர் மஸ்ஜித் உதிர்ந்த நம்பிக்கை' எனும் இதழ் நீதி மன்ற வரலாற்றில் கருப்புக் கொடியேற்றியது. அயோத்தித் தீர்ப்பு இரண்டாவது கரசேவை? என்ற கவிதை நெல்லையில் பேனராகவும், நம் நிலை நன்றாயில்லை, காரணம் - நாம் ஒன்றாயில்லை என்று துவங்கும் ‘கண்ணாடிக் கயிறு’ என்ற கவிதை, மதுரை காஜியார் தோப்பு, இளைஞர் நற்பணி மன்றத்தினரால் அச்சிடப்பட்டு வினியோகிக்கப்பட்டதும், இலங்கை, ‘உண்மை உதயம்’ இதழில் பிரசுரிக்கப்பட்டதும் சமுதாய ஒற்றுமைக்காக மேலும் உழைக்கத் தூண்டியது.
பல இஸ்லாமிய இணைய தளங்களுக்கு மத்தியில் நமது இதழ் சார்பாக நடத்தப்படும் www.samuthayaotrumai.com என்ற இணையதளம் மிகக் குறுகிய காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இஸ்லாம் மட்டுமே உலகிற்கான அழகிய வழிகாட்டி என்பதை கொள்கையாகக் கொண்ட நமது இதழ், மார்க்க தகவல்களை ஒரு பகுதியாகவும் உலக நடப்புகளையும் அதற்கான இஸ்லாமியத் தீர்வுகளை மறு பகுதியாகவும் அமைத்துக் கொண்டது. அதற்காக கடும் சிரமங்களுக்கு மத்தியில் பல பெருமதிப்புள்ள ஆக்கங்களை தந்து, இப்பயணத்தில் தோள் கொடுக்கும் நல்லுள்ளங்களுக்கு அல்லாஹ் ஈருலகிலும் நற்கூலி வழங்குவானாக!
எந்த இயக்கத்தையும் சாராமல், தனித்தன்மையுடன் செயலாற்ற புறப்பட்டபோது, பல சிரமங்களை எதிர் கொள்ளவேண்டியிருக்கிறது. ஓரிரு சகோதரர்களின் பொருளாதாரத்துடன் துவங்கப்பட்ட இலட்சியப் பயணம் கடும் சிரமங்களுக்கு மத்தியில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
சமுதாய ஒற்றுமை இதழுக்கு நீங்கள் சந்தாதாரர் ஆவதுடன், மாதாந்திரம் குறைந்தது ஒருவரையாவது சந்தாதாராக ஆக்கி உதவிடுங்கள்! நிதி நிலையை கருத்தில் கொண்டு பத்திரிக்கையின் விலையிலும் சிறு மாற்றங்கள் வரலாம். விளம்பரங்கள் மட்டுமே பொருளாதாரச் சிரமத்தைக் குறைக்கும் வழியாக இருப்பதால் அதிகமாக விளம்பரம் தந்து இப்பணி சிறக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தலைப்பு: பிறப்பு முதல் இறப்பு வரை – பாகம் – 1 உரை: ஷேஹ். முபாரக் மஸ்வூத் மதனி நாள்: 02-02-2013 – சனிக்கிழமை இடம்: அல்ஹஸனாத் மஸ்ஜித் மற்றும் மதரஸா, கள்ளக்குறிச்சி
தலைப்பு: முன் மாதிரி முஸ்லிம்கள் உரை: மவ்லவி. நூஹ் அல்தாஃபி நாள்: 15-02-2013, வெள்ளிக்கிழமை இடம்: துறைமுகம், ஜித்தா
தலைப்பு: உள்ளம் அமைதி பெற… உரை: மவ்லவி. சல்மான் பிர்தெளஸி நாள்: 15-02-2013, வெள்ளிக்கிழமை இடம்: துறைமுகம் (ஜி.சி.டி. கேம்ப் மஸ்ஜித்), ஜித்தா
இந்த ஆண்டு ஹஜ் செல்ல விரும்புபவர்கள் மார்ச் 20 க்குள் (20.03.2013) விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்: இந்த ஆண்டு 2013 ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்கள்விண்ணப்ப படிவங்களை எண்.13, மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம்நெடுஞ்சாலை)யில், ரோஸிடவர், மூன்றாம் தளத்தில் இயங்கி வரும் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். அல்லது இதற்கான விண்ணப்பத்தை www.hajcommittee.com என்ற இணைய தளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களைமனுதாரர்கள் மார்ச் 20ம் (20.03.2013) தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இதற்கு முன் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
தலைப்பு: கலாசார சீரழிவில் காதலர் தினம் உரை: கோவை. மசூது இடம்: ஜித்தா, துறைமுகம் நாள்: 15-02-2013, வெள்ளிக்கிழமை
பித்அத் – கேள்வி – பதில் – 2 – ஆடியோ நாள்: 01-02-2013 – சனிக்கிழமை இடம்: அல்ஹஸனாத் மதரசா, அர்ரஹ்மானியா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம் தலைப்பு: பித்அத் – கேள்வி – பதில் – 2 - ஆடியோ உரை: ஷேக். முபாரக் மதனி
பித்அத் – கேள்வி – பதில் – 1 - ஆடியோ நாள்: 01-02-2013 – சனிக்கிழமை இடம்: அல்ஹஸனாத் மதரசா, அர்ரஹ்மானியா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம் தலைப்பு: பித்அத் – கேள்வி – பதில் – 1 - ஆடியோ உரை: ஷேக். முபாரக் மதனி
இஸ்லாத்தைப் புரிவதெப்படி – 2 நாள்: 01-02-2013 – சனிக்கிழமை இடம்: அல்ஹஸனாத் மதரசா, அர்ரஹ்மானியா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம் தலைப்பு: இஸ்லாத்தை புரிவதெப்படி – 2 (ஆடியோ) உரை: ஷேக். முபாரக் மதனி
இஸ்லாத்தைப் புரிவதெப்படி – 1 நாள்: 01-02-2013 – சனிக்கிழமை இடம்: அல்ஹஸனாத் மதரசா, அர்ரஹ்மானியா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம் தலைப்பு: இஸ்லாத்தை புரிவதெப்படி – 1 (ஆடியோ) உரை: ஷேக். முபாரக் மதனி
நிம்மதியான வாழ்க்கை – ஆடியோ உரை: ஷேக். முபாரக் மதனி நாள்: 01-02-2013 – வெள்ளிக்கிழமை நேரம்: மக்ரிப் – இஷா தலைப்பு: நிம்மதியான வாழ்க்கை இடம்: பிரஸ்டன் பன்னாட்டுக் கல்லூரி
|
|