• ‘சமுதாய ஒற்றுமைக்காக’ உழைத்திடுவீர்!

    'சமுதாய ஒற்றுமைக்காக' உழைத்திடுவீர்!

    கொள்கை ரீதிதியாகவும் சமூக ரீதியாகவும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பிளவுகளும் பிரச்சனைகளும் ஏராளம்! இதனைக் கண்ட, அல்குர்ஆனையும் சுன்னாவையும் முறையாகப் பின்பற்றும் அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆ கொள்கையைச் சார்ந்த மார்க்க அறிஞர்கள் சிலர்பட்ட கவலையின் வெளிப்பாடுதான் சமுதாய ஒற்றுமை! மாதஇதழ்

    மனித சமூகத்தை ஒன்றிணைக்க இஸ்லாம் ஒன்றே வழி எனும் போது முஸ்லிம் சமுதாய பிளவுகளுக்கு இஸ்லாம் ஒருபோதும் காரணமாகாது என்பதுதான் சமுதாய ஒற்றுமையின் அசைக்கமுடியாத நம்பிக்கை!

    நிச்சயமாக உங்களுடைய இந்த சமுதாயம் ஒரே சமுதாயம்தான்! நானே உங்கள் இரட்சகன்! எனவே என்னை வணங்குங்கள்! என்ற அல்குர்ஆன் (21:92) வசனம் ஏக இரட்சகனான அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்று கட்டளையிடுவதுடன், அவனை வணங்கும் முஸ்லிம் சமுதாயமும் ஏகத்துவமாய் திகழவேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.

    ஏகத்துவம் என்பது முஸ்லிம் சமுதாயத்தை கூறுபோடும் கத்தியல்ல. அந்தப் பெயர் இஸ்லாத்தின் உட்பிரிவினர் எவரின் தனிப்பட்ட சொத்துமல்ல. முஸ்லிம் சமுதாயத்தின் மற்றொரு பெயர்தான் ஏகத்துவ சமுதாயம்!

    முஸ்லிம் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள பிளவுகளுக்கு அதில் புரையோடிக்கிடக்கும் அனாச்சாரங்களும் கொள்கைக் குழப்பங்களும் பெரிதும் காரணமாய் அமைந்துள்ளதை மறுக்கமுடியாது. ஆனால் அதை சீராக்கவும் செப்பனிடவும் இஸ்லாம் வழிகாட்டியுள்ளதா? இல்லையா? என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டிய அம்சமாகும்.

    தனி மனிதரான உங்களை எண்ணிப் பாருங்கள்! உங்களுடைய சிந்தனையாலும் செயல்பாட்டாலும் அனைத்துச் சுழ்நிலைகளிலும் அல்லாஹ் விரும்பியபடி, மார்க்க நெறியில் நடக்கின்றீர்களா?

    தவறு செய்யும்போது உங்கள் மீது நீங்கள் எடுத்துக் கொண்ட ஒழுங்கு நடவடிக்கைகள் என்னென்ன? தவறுக்கு ஒத்துழைத்ததைக் தண்டித்து, உங்களை நீங்களே குருடாகவும், செவிடாகவும், முடமாகவும் ஆக்கிக்கொண்டீர்களா? கட்டுப்படாத உள்ளத்தையும் உயிரையும் மாய்த்துக் கொண்டீர்களா? இவ்வாறு செய்ய மார்க்கம்தான் அனுமதிக்கிறா? இல்லை என்பதுதான் உங்கள் பதில் என்றால், நீங்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்தபோது என்னதான் செய்தீர்கள்!?

    உங்களைத் திருத்தும் போராட்டம் உங்கள் மரணம் வரை தொடர்கிறது! முஸ்லிம் சமுதாயத்தை திருத்தும் போராட்டம் நமது மரணம் வரை ஏன் தொடரக் கூடாது?

    அவர்களுக்கு அல்லாஹ்வின் தண்டனையை எச்சரிப்பது போன்று, அவர்களையும் அல்லாஹ் மன்னிக்கலாம் என்று ஏன் எண்ணக் கூடாது?

    முரண்பாடுகளைக் கண்டவுடன் பிரிவுதான் தீர்வு என்றிருந்தால் உலகில் ஒரே ஒரு குடும்பத்தைக் கூட காணமுடியாது. மனித சமூகத்தின் கட்டமைப்பு இவ்வாறிருக்க, அந்தப் பண்பாடு முஸ்லிம் சமுதாய விஷயத்தில் ஏன் நிலைநாட்டப்படக் கூடாது? என்பதைத்தான் சமுதாய ஒற்றுமை தனது சவாலாக்கிக் கொண்டது! தம்மால் முடிந்த பணிகளை முன்னெடுத்துப் புறப்பட்ட குறுகிய காலத்தில் -அல்லாஹ்வின் உதவியால்- பல வரலாற்றுப் பதிவுகளையும் முக்கிய ஆவணங்களையும் தமிழுலகிற்குத் தந்துள்ளது.

    சமுதாய ஒற்றுமை துவங்கிய இரண்டாவது மாதத்திலேயே 'பிறை ஒரு பிரச்சனையா?' என்ற தலைப்பில் பலதரப்பட்ட அறிஞர்களிடம் பேட்டி கண்டு, ஒற்றுமைக்கான முன்மாதிரியை மேற்கொண்டு முக்கிய வரலாற்றுப் பதிவை ஏற்படுத்தியது. பெருநாள் மகிழ்ச்சிக்கான பாலமாகவும் அது அமைந்தது.

    பொதுநிதியகம் ‘பைத்துல் மால்’ தொடர்பாக ஒரு வரலாற்று ஆவணத்தை சமர்ப்பித்தது. அந்தக் கட்டுரை பிற இதழ்களிலும் பிரசுரிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு அமைப்புகளின் கீழ் இயங்கிவரும் ‘பைத்துல்மால்' சேவைகளை காய்தல் உவத்தல் இன்றி ‘வட்டி ஒழிப்பில் பைத்துல்மாலின் பங்கு’ என்ற தலைப்பில் மக்கள் மன்றத்தில் சமர்ப்பித்தது. அது பல பைத்துல்மால்கள் உருவாக காரணமானது.

    காஷ்மீர்: கண்ணீர் தேசம் என்ற தலைப்பில் வெளியான இதழ் கண்ணீரை வற்ற வைத்தது. இந்திய இராணுவம் இந்தியர்களை காப்பதற்காகவா? முஸ்லிம்களை அழிப்பதற்காகவா? என்ற வினாவை எழுப்பியது.

    திருவிடைச்சேரி பள்ளிவாசலில் டி.என்.டி.ஜே தொடர்புடையவர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு கொலை தொடர்பாக சமுதாய ஒற்றுமை நடத்திய நேரடி களஆய்வு தமிழகத்தில் வளர்ந்து வரும் ‘கவாரஜி என்ற பிரிவினைக்காரர்களை’ மக்களுக்கு மிகத் தெளிவாக அடையாளம் காட்டியது.

    ‘அலக்’ ஓர் அற்புதம் எனும் தலைப்பில் வெளியான இதழ் தமிழகத்தில் அல்குர்ஆனுடன் விளையாடிக் கொண்டிருக்கும் ஒருவரின் அறிவின்மையை ஆதாரங்களுடன் அற்புதமாக நிரூபித்தது.

    வரலாற்றுப் பின்னணியில் ஹிஜ்ரா காலண்டர் என்ற கட்டுரை ஆங்கில காலண்டரின் அலட்சியப் போக்கையும் ஆதாரங்களுடன் அலசியது.

    போர்களப் புயல் திப்பு சுல்தானில் துவங்கி, மருதநாயகம், ஹைதர் என்ற வரலாற்றுப் பயணத் தொடர்கள் முஸ்லிம் மன்னர்களை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்த்தது. வரலாற்று விழிப்புணர்வைம் ஏற்படுத்தியது.

    'பாபர் மஸ்ஜித் உதிர்ந்த நம்பிக்கை' எனும் இதழ் நீதி மன்ற வரலாற்றில் கருப்புக் கொடியேற்றியது. அயோத்தித் தீர்ப்பு இரண்டாவது கரசேவை? என்ற கவிதை நெல்லையில் பேனராகவும், நம் நிலை நன்றாயில்லை, காரணம் - நாம் ஒன்றாயில்லை என்று துவங்கும் ‘கண்ணாடிக் கயிறு’ என்ற கவிதை, மதுரை காஜியார் தோப்பு, இளைஞர் நற்பணி மன்றத்தினரால் அச்சிடப்பட்டு வினியோகிக்கப்பட்டதும், இலங்கை, ‘உண்மை உதயம்’ இதழில் பிரசுரிக்கப்பட்டதும் சமுதாய ஒற்றுமைக்காக மேலும் உழைக்கத் தூண்டியது.

    பல இஸ்லாமிய இணைய தளங்களுக்கு மத்தியில் நமது இதழ் சார்பாக நடத்தப்படும் www.samuthayaotrumai.com என்ற இணையதளம் மிகக் குறுகிய காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    இஸ்லாம் மட்டுமே உலகிற்கான அழகிய வழிகாட்டி என்பதை கொள்கையாகக் கொண்ட நமது இதழ், மார்க்க தகவல்களை ஒரு பகுதியாகவும் உலக நடப்புகளையும் அதற்கான இஸ்லாமியத் தீர்வுகளை மறு பகுதியாகவும் அமைத்துக் கொண்டது. அதற்காக கடும் சிரமங்களுக்கு மத்தியில் பல பெருமதிப்புள்ள ஆக்கங்களை தந்து, இப்பயணத்தில் தோள் கொடுக்கும் நல்லுள்ளங்களுக்கு அல்லாஹ் ஈருலகிலும் நற்கூலி வழங்குவானாக!

    எந்த இயக்கத்தையும் சாராமல், தனித்தன்மையுடன் செயலாற்ற புறப்பட்டபோது, பல சிரமங்களை எதிர் கொள்ளவேண்டியிருக்கிறது. ஓரிரு சகோதரர்களின் பொருளாதாரத்துடன் துவங்கப்பட்ட இலட்சியப் பயணம் கடும் சிரமங்களுக்கு மத்தியில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

    சமுதாய ஒற்றுமை இதழுக்கு நீங்கள் சந்தாதாரர் ஆவதுடன், மாதாந்திரம் குறைந்தது ஒருவரையாவது சந்தாதாராக ஆக்கி உதவிடுங்கள்! நிதி நிலையை கருத்தில் கொண்டு பத்திரிக்கையின் விலையிலும் சிறு மாற்றங்கள் வரலாம். விளம்பரங்கள் மட்டுமே பொருளாதாரச் சிரமத்தைக் குறைக்கும் வழியாக இருப்பதால் அதிகமாக விளம்பரம் தந்து இப்பணி சிறக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    'சமுதாய ஒற்றுமைக்காக' உழைத்திடுவீர்!

Editor’s Articles at Samuthaya Otrumai சமுதாய ஒற்றுமை

பன்முக நாயகர் நபிகள் நாயகம்

April 9, 2011

மீளாது, இருளில் மிடிமையில், இவ்வுலகம் தாளாத கொடுமையில் தடுமாறி நிற்கையில் முழுமதியாய் வந்தார் முகமது நபிநாதர் சீரற்ற உலகை அவர் சீர்திருத்தம் செய்ததனால் சீறத்துந் நபி – நமது சிந்தையிலே இனிக்கிறது… எழுத, படிக்க அறியாத ஏந்தல் நபியை உலகம் எழுதியும், படித்தும் ஏற்றம் பெறுகிறது… அவர் தோன்றையிலே புகழோடு தோன்றினார் உள்ளங்களில் சான்றாண்மையை ஊன்றினார். தூய வழியில் மக்களைத் தூண்டினார். ஏகனை மட்டுமே வணங்குங்கள் என்பதையே வேண்டினார். அன்று அறங்களைத் துறந்திருந்தது அரபகம் மண்டும் மடமைகளுக்கு அதுவே மரபகம் கோத்திரமும் மடமை சாத்திரமும் – கொண்ட ஆத்திரமும் – காட்டும் போர்த்திறமும் நிரம்பியிருந்த மக்களை நபிகள் மாற்றினார். காட்டரபிகள் எனப்பட்டோரை உலகுக்கே – எடுத்துக் காட்டரபிகள் என்றாக்கிக் காட்டினார். உலக மனிதர்களே.. ஒன்று படுங்கள் என்றார் தோழமைத் தோன்றல் அந்த அழைப்பும்.. அயரா உழைப்பும்… கறுப்பின அடிமையாயிருந்த கண்மணியாய் பிலாலை உயர்குலத்தில் பிறந்த உமர் தலைவரே என அழைக்கும் தன்மையைத் மேலும் படிக்க

உதிரும் ஒப்பனைகள்

April 8, 2011

பிரெஞ்சு புரட்சியின் போது மக்கள், “எங்களுக்கு ரொட்டி வேண்டும்” என்று கேட்டபோது, லூயி மன்னர் மனைவி ரொட்டி இல்லை என்றார் ‘அப்போ நாங்கள் எதை சாப்பிடறது” என்ற போது, மக்களிடம் “கேக்” சாப்பிடுங்கள் என்றார். பற்றிக் கொண்டது பிரெஞ்சு புரட்சி. ஒருத்தனுக்கு பிரச்சனை ஆரம்பிக்கும்போது சைத்தான் நுனி நாக்கில் உட்கார்ந்து கொண்டு மிருதங்கம் வாசிப்பான் என்றால் அது மிகையாகாது. பல்வேறு மக்கள் கிளர்ச்சிகளுக்கு ஆட்சியார்களின் அடாவடி, அடிதடியான சொற்கள் தான் மேலும் படிக்க

பலஸ்தீனம்: கசிந்தது கள்ளத்தனம்

March 23, 2011

அரபு நாடுகளின் பிரச்சனைகளில் மையப் புள்ளியாக இருப்பது பாலஸ்தீனம் என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. மேற்குலகின் ஆதரவுடன் இஸ்ரேல் பாலஸ்தீனத்தை விழுங்கியுள்ளதாகவும், அரபு தலைவர்கள் முகத்தை திருப்பிக் கொண்டு வேறு பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதாகவும் அரபு மக்கள் உணர்கிறார்கள். இந்த சூழ்நிலையில் பாலஸ்தீனர்கள் மற்றும் அரபுகளின் மானசீக நகரமாகவும் புனித நகரங்களில் ஒன்றாகவும் நேசிக்கும் ஜெருசலத்தை இஸ்ரேலுக்கு விட்டுக் கொடுக்கும் முடிவு ஒன்று ரகசியமாக செய்து கொள்ளப்பட்டதென தகவல் வெளியானால் மேலும் படிக்க

நல்லாட்சி மலர உழைத்திடுவோம்!

March 21, 2011

நபி(ஸல்) அவர்கள் தமது மக்கா வாழ்க்கையில் எண்ணிலடங்கா துன்பங்களைச் சுமந்த நிலையிலும் கூட அர்க்கம்(ரலி) அவர்களின் வீட்டை வணக்க வழிபாட்டிற்காகவும், கல்விக் கூடமாகவும் பயன்படுத்தியுள்ளார்கள். புனித மதீனாவில் நுழைந்த பதினைந்து நாட்களில் நஜ்ஜார் கிளையார்களால் வழங்கப்பட்ட இடத்தில் மஸ்ஜிதுந் நபவியை கட்டினார்கள். இணை வைத்தலின் சாயல் கூட இறைவழிபாட்டில் படிந்துவிடக் கூடாது என்பதற்காக, அந்த இடத்தில் புதைக்கப்பட்ட உடல்களில் மண்ணரிக்காத மீத பகுதிகளை தோண்டி அப்புறப்படுத்தினார்கள். மஸ்ஜிதுந் நபவியை எழுப்பும் மேலும் படிக்க

இந்த கொலைக்கு காரணம்

March 10, 2011

தில்லியில், நொய்டா பகுதியில், 2008ம் ஆண்டு, மே மாதம் 16ம் நாள் அரூசி தல்வார் என்ற 15 வயது சிறுமியும் அவளது வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ்-ம் அரூசியின் வீட்டில் கொல்லப்பட்டுக் கிடந்தனர். இந்த வழக்கில் தில்லி காவல்துறை முதல்கட்ட விசாரணை நடத்தியது. அரூசியின் அப்பா ராஜேஷ் தல்வார் தான் கொலையாளி என்றும், கொல்லப்படும் முன்பு அரூசி கற்பழிக்கப்பட்டுள்ளார் என்றும் காவல்துறை சொன்னது. காவல்துறையின் இந்த அறிக்கை தில்லியில் பெரும் பரபரப்பை மேலும் படிக்க

பெருகிவரும் உலக முஸ்லிம் மக்கள் தொகை

March 9, 2011

முஸ்லிம் மக்கள் தொகையில் தற்போது முதலிடத்தில் இருக்கும் இந்தோனேசியாவை விரைவில் பாகிஸ்தான் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடிக்கும் என்று அமெரிக்கா ஆய்வு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வாஷிங்டனை சேர்ந்த மத மற்றும் பொதுவாழ்க்கை குறித்த ஆராய்ச்சி மையம் ஒன்று நடத்திய ஆய்வில், அடுத்த இருபது ஆண்டுகளில் இஸ்லாமியர் அல்லாதவர்களின் எண்ணிக்கையிலிருந்து இரு மடங்கு அதிகமாக இஸ்லாமியர்களின் எண்ணிக்கை இருக்கும் என்று தெரியவந்துள்ளது. இது குறித்து அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: அதிகரிக்கும் மேலும் படிக்க

துனீஷியா: அரபுலகை அசைத்த மக்கள் புரட்சி

March 5, 2011

துனீஷியா ஆப்பிரிக்க கண்டத்தின் வடக்கில் மத்திய தரைக்கடலை ஒட்டியுள்ள நாடு. 99% அரபு மொழி பேசும் முஸ்லிம்களை கொண்ட இந்நாடு 1 1/2 கோடி மக்கள் தொகையை கொண்டது. 1300 கி.மீ கடற்கரையை கொண்ட நீண்ட பாரம்பரிய செழுமை கொண்டது. கி.பி 6ம் நூற்றாண்டில் பைசாந்தியர்களால் வெற்றிக் கொள்ளப்பட்ட இம்மண்ணில் 8ம் நூற்றாண்டில் அரேபியர்கள் நுழைந்தனர். இஸ்லாத்தை இருகரம் ஏற்று அரவணைத்த இம்மக்கள் அரபு மொழியையும் தமதாக்கி கொண்டனர். பின்னர் மேலும் படிக்க

அசிமானந்தா கழட்டிவிடப்பட்ட ஏஜென்ட்

February 27, 2011

சாலை ஓரத்தில், பேருந்தில், ரயில் பயணத்தில், கடை வீதியில் எங்காவது, தொப்பியும் தாடியும் வைத்துள்ள ஒரு முஸ்லிம் கையில் ஒரு மஞ்சள் பையுடன் காணப்பட்டால், “பையில் என்ன பாய் வெடிகுண்டா” என்று நக்கலடித்து கேட்பது ஒரு வழக்கமாக மாறிவிட்டிருந்தது. பத்திரிகையாளர் முதல் பொதுமக்கள் வரை முஸ்லிம் என்றால் தீவிரவாதி என்று சொல்லத் தொடங்கினர். பிச்சை எடுக்கும் முஸ்லிம் கூட இந்த அவசொல்லுக்கு ஆளாக நேர்ந்தது. தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் மேலும் படிக்க

அசிமானந்தா: மனம் உருகினார் மாமா

February 18, 2011

அஜ்மீர்தர்கா, மக்கா மஸ்ஜித் (ஹைதராபாத்) உள்ளிட்டு நடந்த சில குண்டு வெடிப்புகளுக்கு தான் பொறுப்பேற்பதாக அவ்வழக்குகள் சம்பந்தமாக கைது செய்யப்பட்டிருக்கும் அசிமானந்தா எனும் சாமியார் ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த ஒப்புதல் வாக்கு மூலத்திற்கு பின்னணியாக மனம் உருகும் உண்மை சம்பவம் இருந்திருக்கிறது. 80 வருட இந்திய சினிமா வரலாற்றில் கூட இதுபோன்றதொரு கதை புனையப்பட்டதில்லை எனலாம். தரமானதொரு கலைப்படம் பண்ணத்தக்க விதமாக அச்சம்பவம் நடந்திருக்கிறது. ஆனால் இது “கதையல்ல நிஜம்”. மேலும் படிக்க

அரசியல் சூழ்ச்சிகளை முறியடிப்போம்

February 11, 2011

இஸ்லாம் என்பது உலக நடைமுறை நெறியாகும். இஸ்லாம் மனித வாழ்வின் இலக்காக அல்லாஹ்வின் பொருத்தத்தையும் சொர்க்க வெற்றியையும் நிர்ணயித்த போதிலும் அந்த நம்பிக்கையின் பிரதிபலிப்பை இவ்வுலகில் காண நினைக்கிறது. எனவே இஸ்லாத்தின் கட்டளைகளுக்கு இணங்க, இவ்வுலக வாழ்வை தூய்மையானதாக ஆக்கிக் கொள்வது ஒவ்வொரு மனிதன் மீதும் கடமையாகும். தன்னை சீர்திருத்துவது மட்டுமின்றி தான் வாழும் உலகை நெறிமுறைப்படுத்துவதும் தூய்மையாக்குவதும் நீதிமிக்க அரசை நிலை நாட்டுவதும் முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டமார்க்கக் கடமையாகும். மனித மேலும் படிக்க

உடைந்த ரகசியங்கள் – Wikileaks (விக்கீ லீக்ஸ்)

January 15, 2011

இணையதளம் ரகசியங்களை பாதுகாக்கும் பெட்டகம் இல்லை என்பதை ‘விக்கிலீக்ஸ்’ என்ற இணையதளம் உண்மை படுத்திவிட்டது. பாதுகாப்பின் உச்சம் என்று உலகம் நம்பும் பென்டகனின் ரகசியங்களை நோண்டியிருக்கிறது இந்த இணையதளம். 16 வயதிலேயே கணிணியின் சகல பரப்பிலும் புகுந்து விளையாடிய ஜீலியன் பால் அசஞ்சே (Julian paul Assa nge) என்ற 39 வயது இளைஞர் அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை விஞ்ஞான தொழில் நுட்பத்தை கொண்டு பக்கம் பக்கமாக களவாடிவிட்டார். இந்த மேலும் படிக்க